தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இணையைத் தேடி ஈராயிரம் கி.மீ அலையும் புலியின் கதை

மும்பை: தியான்கங்கா வனவிலங்கு சரணாலயத்தில் புலி ஒன்று தனது இணையைத்தேடி இரண்டாயிரம் கி.மீ அலைந்து திரிந்துவருவதாக வனத்துறை அலுவலர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

By

Published : Mar 6, 2020, 12:06 PM IST

tiger-walks-2000km
tiger-walks-2000km

இதுகுறித்து பர்வீன் கஸ்வான் எனும் வனஅலுவலர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா மாநிலம் தியான்கங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் புலி ஒன்று தனது இணையத்தேடி கால்வாய்கள், வயல்கள், காடுகள், சாலைகள், மலைகள் என அலைந்து திரிந்துவருகிறது.

இதுவரை இரண்டாயிரம் கி.மீட்டர்கள் வரை கடந்துள்ள அப்புலியின் பயணம் முடியவில்லை. பகலில் ஒய்வெடுத்தும், இரவில் நடந்தும் பயணத்தை தொடர்ந்துவருகிறது, இணையைத்தேடி அலையும் புலிகள் கடக்கும் தூரத்தில் இது மிக நீளம்” என்று பதிவிட்டுள்ளார்.

புலிகளைக் கண்காணிக்கப்பதற்காக 2019ஆம் ஆண்டு, அவற்றின் மீது ரேடியோ கருவி பொருத்தப்பட்டது. அதன் மூலம் புலிகள் கடந்துசெல்லும் தூரம் கணக்கிடப்படுகிறது.

இதையும் படிங்க:காட்டு யானைகள் முன்பு ஹாயாக ரிலாக்ஸ் செய்த புலி!

ABOUT THE AUTHOR

...view details