மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்திராப்பூர் மாவட்டத்தில் புலி ஒன்று சுற்றித்தரிந்துள்ளது.
இந்தப் புலி கடந்த பிப்ரவரி- ஜூன் மாதங்களுக்கு இடையில் மட்டும் கொலரா, பாமங்காவ்ன், சதாரா ஆகிய கிராமங்களில் ஐந்து பேரை கொன்றுள்ளது.
இதையடுத்து, மகாராஷ்டிரா தலைமை வனவிலங்கு காப்பாளர், ஜூன் 8ஆம் தேதி புலியை பிடிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் விரைந்த வனத்துறை, கொலரா வனப்பகுதியில் புலியை சுற்றி வளைத்து மயக்கி ஊசிப்போட்டு பிடித்தனர்.
பின்னர், புலி அங்கிருந்து நாக்பூரில் உள்ள கோரேவாடா மீட்பு மையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், மையத்திலிருந்த புலி திடீரென்று நேற்று உயிரிழந்தது.
இதையும் படிங்க: பசுவை வேட்டையாடிய புலி : அச்சத்தில் மலை கிராம மக்கள்