தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூங்கிலில் வடிவமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை!

திருவனந்தபுரம்: திரிச்சூரில் மூங்கில் மூலம் மோகனன் என்பவர் புத்தர் சிலை வடிவமைத்துள்ளதை அடுத்து மூங்கிலிலிருந்து வீணாகும் பொருள்களை வைத்தும் அவர் சிலைகள் வடிவமைத்து அசத்திவருகிறார்.

By

Published : Oct 26, 2019, 2:49 PM IST

sculptures

கேரள மாநிலம் திரிச்சூர் கலாசார, பண்பாடு மிகுந்த கைவினைப் பொருள்கள் அதிகம் தயாரிக்கப்படும் இடம். பல்வேறு கைவினைப் பொருள்கள், சிலைகள் உள்ளிட்டவை இப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இதனிடையே, திரிச்சூரில் உள்ள வடக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மோகனன் தச்சராக உள்ளார். இவர் சிலைகள் செய்து அசத்திவருகிறார். சிலைகள் அனைத்தும் மூங்கில் மூலமும் அதிலிருந்து வீணாகும் பொருள்கள் மூலமும் வடிவமைத்துவருகிறார்.

மூங்கிலில் வடிவமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

இது தொடர்பாக மோகனன் கூறுகையில், "சுற்றுச்சூழல் எந்தவொரு மாசும் இல்லாமல் சீராக இருந்தால் வருங்கால தலைமுறையினருக்கு இது போன்று இயற்கை முறையில் சிலைகள் வடிவமைப்பது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

ரசாயனம் இல்லாமல் இயற்கையாகவும், அதிலிருந்து வீணாகும் பொருள்களை வைத்தும் சிலைகளை வடிவமைத்துவருகிறேன். தற்போது மூன்று அடியில் ஒரு புத்தர் சிலை வடிவமைத்துள்ளேன். அது முழுக்க மூங்கிலால் ஆனது. இதேபோல் மூங்கிலால் பல சிலைகள் வடிவமைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: விஜய் மெழுகு சிலை அமைக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details