தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2020, 5:29 PM IST

ETV Bharat / bharat

'உண்மையான துண்டாடும் குழுக்கள்' மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்குதல்

டெல்லி : ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா பத்து இடங்கள் சரிந்துள்ள நிலையில் ப.சிதம்பரம், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Those in power are real tukde tukde gang: Chidambaram
Those in power are real tukde tukde gang: Chidambaram

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், “ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா பத்து இடங்கள் பின்னோக்கி சரிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனநாயகம் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதை கூர்ந்து கவனித்தால் அறியலாம். மத்தியில் உண்மையான துண்டாடும் குழுக்கள் (துக்டே துக்டே கேங்) ஆட்சியில் இருக்கின்றன” என கூறியுள்ளார்.

மேலும், “இந்தியாவின் பாதை உலகையே திகைக்க வைக்கின்றது. ஆகவே ஒவ்வொரு இந்திய தேசப்பக்தர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான நிறுவனம் ஒன்று ஜனநாயக நாடுகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு ஜனநாயக நாடுகள் பட்டியல் வெளியானது. இதில் இந்தியா பத்து இடங்கள் சரிந்துள்ளது. முன்னதாக துக்டே துக்டே கேங் (துண்டாடும் குழுக்கள்) என்ற வார்த்தையை குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மீது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரயோகித்தார்.
தற்போது அந்த வார்த்தையை மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: நரேந்திர மோடி, அமித் ஷா மீது சுப்ரியா சுலே கடும் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details