ராஜஸ்தான் மாநிலம், வர்தா காவல் எல்லைக்குட்பட்ட துர்காபூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நேற்று டவுன் பகுதியில் உள்ள கடைக்கு காய்கறிகள் வாங்க சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் டாக்ஸியில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய அந்த சிறுமியும், டாக்ஸியில் ஏறியுள்ளார். இதையடுத்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற டாக்ஸி ஓட்டுநர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறுமியை வன்புணர்வு செய்த டாக்ஸி ஓட்டுநர்
ஜெய்ப்பூர்: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டாக்ஸி ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
டாக்ஸி டிரைவர்
பின்னர் மயக்க நிலையில் கிடந்த சிறுமியை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.