பேரிடர் காலத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவது வழக்கம். அவர்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்கள் பெரும் பங்கு வகிப்பர். கரோனா பேரிடர் மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனையொட்டி அரசின் அறிவுப்பு ஒன்று அமைந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊக்க திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு சமூக செயற்பாட்டாளர்கள் பொது நல வழக்கை தொடர்ந்தனர்.
ஊரடங்கின்போது, நாடு முழுவதும் உள்ள 578 மாவட்டங்களில் பல்வேறு மாநில அரசுகளால் 22,547 உதவி முகாம்கள் திறக்கப்பட்டன. அதில், 4,000 முகாம்கள் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுபவை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில், பல்வேறு அரசுளால் 54 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளன. தொண்டு நிறுவனங்களால் அதில், 30 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், மிசோரம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு உணவளிப்பதில் தொண்டு நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன. நிலநடுக்கம், பஞ்சம், சுனாமி, வெள்ளப்பெருக்கு, தீ விபத்து, பேரிடர் போன்ற காலங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசுக்கு அடுத்தப்படியாக தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பெரும் பங்காற்றிவருகின்றன.
டெல்லியில் உள்ள மத்திய புள்ளியியல் நிறுவனம் அளித்த தகவலின்படி, நாட்டில் 30 லட்சம் அமைப்புகள் உள்ளன. நகர்ப்புறங்களில், ஆயிரம் பேருக்கு நான்கு தன்னார்வலர்களும் கிராமப்புறங்களில் இரண்டு தன்னார்வலர்களும் உள்ளனர். சமூக வளர்ச்சியில் பெரிய பங்காற்றும் தன்னார்வு அமைப்புகள் பல்வேறு விதமான சேவைகளை செய்வதில் முன்னணியில் உள்ளன.
காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை அரசுக்கு தன்னார்வு அமைப்புகள் வழங்குகின்றன. கேள்வி எழுப்புவது, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, சட்டம் குறித்து பதிலளிப்பது, நிர்வாகத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவது ஆகியவையே தன்னார்வு அமைப்புகளின் நோக்கங்கள் ஆகும்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களை மருத்துவம் பார்க்க அனுமதியுங்கள்- எம்.பி. ரவிக்குமார்