2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ், அவரது வீட்டிற்கு வெளியே மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்புக்கு தொடர்புள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, லங்கேஷ் கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளது எனக்கூறிய ராகுல் மற்றும் யெச்சூரி ஆகிய இருவரும் ஒரு ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என விவேக் சம்பானேர்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கறிஞர் த்ரூதிமான் ஜோஷி என்பவரும் இருவருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ஆர்வலர்கள் தொடுத்த மனுக்களை விசாரித்த தானே நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகிய இருவரையும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.