தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கும்பமேளாவிற்கு டென்ட் சப்ளையர்... வெளிவந்த 109 கோடி பண மோசடி!

லக்னோ: போலியான பில்கள் மூலம் உபி அரசை ஏமாற்ற முயன்ற டென்ட் சப்ளையர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By

Published : Dec 6, 2020, 8:23 PM IST

லக்னோ
லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள தரகஞ்ச் காவல் நிலையத்தில், பிரபல டென்ட் சப்ளையர்களான 'லல்லுஜி அண்ட் சன்ஸ்' மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், போலியான பில்கள் மூலம் உபி அரசிடம் ரூ .109.85 கோடி மோசடி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனம் பல தசாப்தங்களாக மகா கும்பம், கும்பம் மற்றும் மாக் மேளா போன்ற விழாக்களுக்கு கூடாரங்கள், பர்னிச்சர், ஒலிபெருக்கிகளை வழங்கி வருகிறது.

இது குறித்து கிடைத்த தகவலின்படி, இந்நிறுவனம் பிப்ரவரி 2017 முதல் 2019 ஜூலை 6 வரை, ரூ .196.24 கோடி மதிப்பிலான பில்களை சமர்ப்பித்துள்ளது. விசாரணையில், 86.38 கோடி ரூபாய் பில்கள் மட்டுமே உண்மையானவை என்றும், மற்றவை போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் கும்பமேள அலுவலர் தயானந்த் பிரசாத் அளித்த புகாரின் பேரில், தரகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், நிறுவனத்தை சேர்ந்த 11 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தால் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் கும்பமேளா அலுவலர் விஜய் கிரண் ஆனந்த், "இந்நிறுவனம் கோடிக்கணக்கான மதிப்பிலான போலி பில்களை திரட்டியது. அனைத்து துறைகளிலிருந்தும் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை, கணக்கிட்டால் சுமார் 171 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எங்கள் அலுவலர்களின் போலியான கையொப்பங்களை அடங்கிய ஆவணங்களை முன்வைத்துக்கொண்டு, இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட லல்லுஜி அண்ட் சன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details