சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்றுவது, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 5ஆம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு குறித்த நாட்களுக்குள் பணிக்கு திரும்பாததால், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கிட்டதட்ட 50 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கினார். மேலும் அவர்களது போராட்டம் தீவிரமானது.
இந்நிலையில், அக்டோபர் 13ஆம் தேதி சாலையில் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், 14ஆம் தேதி பேருந்து பணிமனைக்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், 16ஆம் தேதி மாணவர்கள் அமைப்புடன் இணைந்து பேரணி நடத்தவுள்ளதாகவும், 17ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து, போக்குவரத்து ஊழியர்களுடன் 19ஆம் தேதி அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி