தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐடி ஊழியர் உயிருடன் எரித்துக் கொலை : மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

ஹைதராபாத் : ஜாக்டியல் மாவட்டத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயர் ராச்சார்லா பவன் குமார் என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட ஐந்து பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

murder
murder

By

Published : Nov 25, 2020, 3:19 PM IST

தெலங்கானா மாநிலம், ஜாக்டியல் மாவட்டத்தில் உள்ள பல்வந்தபூர் பகுதியில் வசித்து வந்தவர் சாப்ட்வேர் இன்ஜினீயரான ராச்சார்லா பவன் குமார். அவரது மனைவி கிருஷ்ணவேனி. பவன் குமார் கடந்த திங்கள்கிழமை (நவ.23) உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஜாக்டியல் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவை குறித்து காவல் துறையினர் தெரிவித்தவை பின்வருமாறு, “பவன் குமார் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுமலதா என்பவருக்கும், (கிருஷ்ணவேனியின் உறவினர்) பவன் குமாரைத் தகனம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்த பவனின் மனைவி கிருஷ்ணவேனிக்கும் அவரது கொலையில் தொடர்புள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிஐடி கிஷோர் இது குறித்து கூறியுள்ளதாவது:

ஒரு ஆண்டுக்கு முன்னர் கிருஷ்ணவேனி அலிதாபாத் பகுதியில் தனது உறவினரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு அவர் அணிந்திருந்த 60 கிராம் எடை கொண்ட தங்க நகை திருடுபோனது. இதனால் பவன் குமார் மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், அவரது மைத்துனரான ஜெகனே இந்த நகைகளைத் திருடியிருப்பார் என்ற சந்தேகத்தின்பேரில் அவரைக் கொலைசெய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் ஜெகன் சமீபத்தில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்த நிலையில், பல்வந்தபூர் புறநகர் பகுதியில் மஞ்சுநாதா கோயிலில் தங்கி ஆசிரமம் ஒன்றை நடத்திவரும்கிருஷ்ணவேனியின் சகோதரர் விஜயசாமி,தனது குடும்ப உறுப்பினர்களிடம் பவன் குமார் வைத்த சூனியத்தால் தான் ஜெகன் இறந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனை நம்பி குடும்பத்தினர் பவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். கிருஷ்ணவேனி, விஜயசாமி உடன் கிருஷ்ணவேனியின் உறவினர் சுமலதா, சகோதரி ஸ்வரூபா, தாய் பரிமலா ஆகியோர் இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் திட்டமிட்டபடி, ஜெகனின் பன்னிரெண்டாம் நாள் சடங்கில் கலந்துகொண்ட பவன் குமார், ஜெகனின் ஆத்மாவிற்கு மஞ்சுநாதா கோயிலுக்கு அருகிலிருந்த ஒரு அறையில் மரியாதை செலுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அறையின் கதவைத் தாழிட்டு பிறர் பூட்டு போட்டுள்ளனர்.

அன்பிறகு, கிருஷ்ணவேனியின் நெருங்கிய உறவினர்களும், கொண்டகட்டு பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி என்ற இளைஞரும் சேர்ந்து அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் பவன் குமார் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், பவன் குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கங்காதர் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணவேனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதும், நிரஞ்சன் ரெட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

மனைவியே கணவரை உயிருடன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details