தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பதவியேற்றுக்கொண்டதும் காங்கிரஸ் பிரமுகர் காலில் விழுந்து ஆசி பெற்ற தமிழிசை!

ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றதும் தமிழிசை, தனது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

Tamilisai Soundararajan

By

Published : Sep 8, 2019, 1:56 PM IST

பாஜகவின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் தமிழிசை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 1) நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்று தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், தெலங்கானா அமைச்சர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆளுநராகப் பதவியேற்றதும் மேடையிலிருந்து கீழேயிறங்கிய தமிழிசை, தனது தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

தந்தை காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ஆளுநர் தமிழிசை

அதைத் தொடரந்து அருகிலிருந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர், மற்றும் மற்ற அமைச்சர்களிடமிருந்தும் வாழ்த்துகளைப் பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details