தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டாசு உற்பத்தியாளர் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடுத்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

supreme-court-refuse-the-sivakasi-crackers

By

Published : Oct 16, 2019, 6:27 PM IST

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சுழலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது.

மேலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் தொழில்நுட்ப நிறுவனம் பரிந்துரை செய்த விதிகளின்படி தற்போது பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுவருகிறது.

வருகிற 27ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், சில கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

தீபாவளி நெருங்குவதால் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பத்திரிகையாளர் கொலை - பரபரப்பான விசாரணையில் காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details