தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊதிய பிரச்னை... தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்!

புதுச்சேரி: ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

ஊதியம் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
ஊதியம் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்

By

Published : May 5, 2020, 11:56 AM IST

புதுச்சேரி நகராட்சியில் 650க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது, சாலைகளை சுத்தப்படுத்துதல், குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தல் போன்ற பணிகளை செய்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி நகராட்சி தலைமை அலுவலகம் வளாகத்தில் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திடீரென வேலையை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும், அரசின் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஒரு மாத ஊதியத்தை வழங்கவில்லை என்றும், இதற்கு கண்டனம் தெரிவித்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சங்க நிர்வாகி பத்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோயம்பேடு ரிட்டர்ன் இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று!

ABOUT THE AUTHOR

...view details