தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இடத்தில் இருந்து துர்கா சிலைக்கு மண்: வழக்கத்தை மாற்றும் சமய தலைமைகள்...!

கடவுள் என்றாலே பயபக்தியுடன், சுத்தமாக இருந்து கடவுளை வணங்குவோம். ஆனால், கொல்கத்தாவில் மட்டும் நவராத்திரியின்போது துர்கா சிலை செய்யும்போது பாலியல் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து துர்கா சிலை செய்கின்றனர். இந்த முறையை தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

துர்கா சிலை
துர்கா சிலை

By

Published : Jul 8, 2020, 8:00 PM IST

பாவம் விதியின் வசத்தால் காலம் முழுவதும் சீரழியும் பாலியல் தொழிலாளிகள் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்று கொஞ்சம் மண் கொடுங்கள் என்று பூசாரிகள் கேட்டு வாங்கி வருகின்றனர். இந்து தர்மத்தின்படி துர்கா சிலை செய்ய 4 பொருட்கள் முக்கியமாக தேவைப்படுகிறது.

அவை கங்கை கரையில் இருந்து எடுக்கப்படும் மணல், பசுவின் கோமியம், பசுவின் சாணம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்படும் மணல். இவற்றை வைத்து துர்கா சிலை செய்கின்றனர்.

இது எதற்காக என்பது மட்டும் யாருக்காகவும் தெரியாது. பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து மணல் எடுப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. கோயில் பூசாரி பாலியல் தொழில் செய்பவர்களின் வீட்டு முன்பு மணல் கேட்டு நிற்க வேண்டும்.

அப்படி மணல் கொண்டு வந்து கொடுக்கும்போது, பூசாரி வேத மந்திரங்கள் ஓத வேண்டும். மணல் கொடுக்க விலை மாதர்கள் மறுத்தாலும் தொடர்ந்து மணல் கேட்டு பூசாரி கெஞ்ச வேண்டும்.

'பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்' - இயக்குநர் கௌதமன்

வருடம் முழுவதும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் இவர்கள் துர்கா பூஜையின்போது மட்டும் அமைக்கப்படும் பந்தல் வரை வரவழைக்கப்படுகின்றனர். மரியாதை அளிக்கப்படுகிறது.

இது தற்போது முற்றிலுமாக நிறுத்தப்படவிருப்பது, அம்மகளிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details