பாஜகவில் தலைமையை மதித்து நடப்பது என்பது வாஜ்பாய் காலத்தில் இருந்தே அரிதிலும் அரிதான செயலாகும். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தலைமையை தவிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அக்கட்சியின் மேல் கொண்டு இருந்த செல்வாக்காகும். ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மோடி, அமித் ஷா கூட்டணி பாஜகவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது.
கட்சியினர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தலைமையின் பங்கு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். தலைமையை தாண்டி ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு கட்சி சென்றுவிட்டதாகவும் கூறினர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் 17 சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவெடுத்தது.