17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 298 தொகுதிகளில் வெற்றியையும், 5 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
ராகுலின் தலையெழுத்தை மாற்றிய ஸ்மிருதி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்மிருதி இரானி
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார். சுமார் 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் கோட்டையை ஸ்மிருதி இரானி தகர்த்து எறிந்துள்ளார்.