தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேரிடர் காலங்களில் பொது சுகாதாரத் துறையின் முக்கியத்துவம்

கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ அவசர நிலையால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியரஞ்சன் ஜா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை காண்போம்...

Corona
Corona

By

Published : Apr 9, 2020, 8:44 AM IST

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கை பிறப்பித்தது. இந்த உத்தரவின் பின்னணியில் சரியான தொற்றுநோயியல் தரவுகள் உள்ளன. எந்தவித முன்னெச்சரிக்கையின்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால், ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் இவர்கள் தங்கள் மாநிலத்துக்கு செல்ல முடியாமல் மாநில எல்லைகளில் தவித்துவருகின்றனர்.

தினக்கூலியின்றி ஏழை மக்கள் எப்படி மூன்று வாரங்களுக்கு வாழ்வார்கள் என்பதை யாரும் யோசிக்கவில்லை. ஊரடங்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களுக்கு உதவும் நோக்கில் உதவி தொகை அளிக்கப்பட்டது. சரியான திட்டமிடல் இருந்திருந்தால் இந்த உதவி தொகை ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கலாம்.

கரோனாவுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடித்த காரணத்தால் பல நாடுகளில் கரோனாப் பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், கரோனா வைரஸ் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. மூன்று வாரங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தொற்று நோய் முழுவதுமாக அழிந்துவிடும் என்ற எண்ணம் தோன்றினால் அது முட்டாள்தனமானது.

கரோனா

ஊரடங்கை பயன்படுத்தி நோய் கண்டறியும் மையங்களை திறப்பது, தனிமைப்படுத்தப்படும் வார்டுகளை அதிகரிப்பது, நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும். கரோனாவுக்கு எதிராக போர் தொடுப்பதில் முன்னணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு அடிப்படை உபகரணங்கள் வழங்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

முகக் கவசங்கள் தயாரிப்பதில் பற்றாக்குறை நிலவுவதாக மக்களிடையே கருத்து நிலவிவருகிறது. எனவே, போதுமான அளவு முகக் கவசங்களை அனைவருக்கும் வழங்க வேண்டும். அனைவரையும் பரிசோதனையில் ஈடுபடுத்துவது முடியாத காரியம், கரோனா அறிகுறியுள்ளவர்கள் நோயை பரப்ப வாய்ப்புள்ளது. எனவே, கிழக்காசியாவில் உள்ளதுபோல் பொதுவெளியில் நடமாடும் அனைவருக்கும் முகக் கவசங்கள் அளிக்க வேண்டும்.

கரோனா

இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்காலும் எதிர்காலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்காலும் நாம் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். அதில், பெரும் பங்கு ஏழை மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். கரோனா இந்தியா முழுவதும் பரவினால் ஏழை மக்கள் மேலும் பாதிப்படைவார்கள்.

கரோனா

சுகாதாரமற்ற சூழலில் இடநெருக்கடியில் வாழும் ஏழை மக்களுக்கு குறைந்த அளவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அவர்களுக்கு நோய் தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். நோய் கண்டறிவதற்கான பரிசோதனையில் ஈடுபடுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் அவர்களிடம் போதுமான அளவு பணவசதி இல்லை. தனியார் நோய் கண்டறியும் மையங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கரோனா

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்கள் பரிசோதனை செய்து கொள்வதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் அரசே நிதியுதவி வழங்க வேண்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்வதற்கு அவர்களுக்கு இந்த நிதியுதவி ஊக்கமாக இருக்கும். இடவசதியை கருத்தில் கொண்டு பார்த்தால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது ஏழை மக்களுக்கு முடியாத காரியம். எனவே, அரசு மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதற்கு ஏற்றார்போல் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் எந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது போன்ற தைரியமான முடிவுகளை எடுத்தார்கள். அதிக காலம் வாழும் நபர்களுக்கு (இளைஞர்கள்) சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா

யாருக்கு முன்னிரிமை வழங்கப்படும் என்பது இந்தியாவில் நிலவும் களநிலவரங்களை அறிந்தவர்களுக்குத் தெரியும். 75 வயது பணக்காரருக்கும் 30 வயது ஏழை பெண்ணுக்கும் நோய் பாதிப்பு இருந்தால், பணக்காரரே முதலில் சிகிச்சை பெறுவார். இம்மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க விதிகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் போன்ற அமைப்புகள் அறிவுறுத்த வேண்டும்.

ஒரு முனையில் வேலை சுமையாலும் மறு முனையில் நோயாளிகளின் குடும்பத்தாலும் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு இதுபோன்ற அறிவுறுத்தல் நிச்சயம் உதவும். அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அரசு கடுமையான விதிகளை விதித்து இம்மாதிரியான சூழ்நிலையில் யாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details