உலக நாடுகளில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அமெரிக்காவில் உயிரியல் பூங்காக்களிலும் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்களுகளுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டன. எனவே, விலங்குகள் மூலம் கரோனா பரவுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்கனஹள்ளி அடுத்துள்ள கோடேகேர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவரது ஆடுகள் மூலம் மற்றவர்களுக்கு கரோனா பரவாமல் இருப்பதை உறுதி செய்ய, அவரது 47 ஆடுகளையும் சுகாதார துறை ஊழியர்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஆடுகளுக்கு கரோனா இருக்கிறதா என்பதை கண்டறிய அவற்றின் எச்சில் மாதிரிகளையும் சுகாதார துறையினர் சேகரித்துச் சென்றனர் ஆடுகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட ஆடு மேய்ப்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஆடுகள் செம்மறி ஆடுகள் சிக்கனஹள்ளி கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை ஆடுகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 500 கோடி பதிவிறக்கங்களை நெருங்கிய தடை செய்யப்பட்ட சீன செயலிகள்!