தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினராகும் சரத் பவார்?

டெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சரத் பவார் இன்று வேட்புமனு தாக்கல்செய்தார்.

Pawar
Pawar

By

Published : Mar 12, 2020, 8:31 AM IST

17 மாநிலங்களில் 51 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தலை மார்ச் 26ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நான்கு உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த காரணத்தால் மொத்தம் 55 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை தாக்கல்செய்தார். அக்கட்சியின் மற்றொரு வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பவசியா கான் நாளை வேட்பு மனுவை தாக்கல்செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமர் சேபில், சஞ்சய் கக்கடே, ராம்தாஸ் அத்வாலே, ஹுசைன் தால்வாய், ராஜ்குமார் தூத், மஜித் மேனன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details