தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசு தின வன்முறை வழக்கு: சசி தரூர், பத்திரிகையாளர்களை கைது செய்ய தடை!

டெல்லி: குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Feb 9, 2021, 1:18 PM IST

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட 90 நாள்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒரு அங்கமாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. எதிர்பாராதவிதமாக, அதில் வன்முறை வெடித்தது.

வன்முறையை தூண்டும் விதமாக சசி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாக அவர்கள் மீது தேச துரோகம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

சசி தரூர், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், மிருனல் பாண்டே, தோஃபர் ஆகா, வினோத் கே. ஜோஸ், பரேஷ் நாத், அனந்த் நாத் ஆகியோர் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தார். எதிர்தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் எடுக்கும் வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வாதாடினார்.

அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, இதுதொடர்பான வழக்கில் அவர்களை கைது செய்ய தடை விதித்தது.

இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டியது, சதி செயலில் ஈடுபட்டது, டிராக்டர் பேரணியின் போது விவசாயி ஒருவரை காவல்துறை கொலை செய்ததாக பொய் செய்தி பரப்பியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details