தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2020, 11:37 PM IST

ETV Bharat / bharat

சமய மாநாடு விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

டெல்லி: சமய மாநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது தொடர்பாக டெல்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SC
SC

இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்த வேளையில், தலைநகர் டெல்லியில் குறிப்பிட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் குழுமியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், டெல்லியில் உள்ள நிசாமுதீன் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் குழுமியது நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

சமய மாநாட்டிற்கு வந்தவர்கள் அரசிடம் அனுமதி பெற்றே கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்ற நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எங்கே கவனக்குறைவாக செயல்பட்டன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்ற பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு, டெல்லி அரசு உள்ளிட்டவை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழக்கறிஞரான துஷார் மேத்தா இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவுக்கு அடுத்தாண்டுக்குள் தடுப்பூசி: ராகுலிடம் நம்பிக்கைத் தெரிவித்த ஹார்வர்ட் பேராசிரியர்

ABOUT THE AUTHOR

...view details