தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொலைத்தொடர்பு சேவைகளை இலவசமாக தரக்கோரிய மனுவை திரும்பப்பெற்ற வழக்கறிஞர்!

டெல்லி: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், மக்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அரசு அழைப்பு, இண்டர்நெட், டிடிஹெச் உள்ளிட்ட வசதிகளை இலவசமாக வழங்கக்கோரிய மனு திரும்பப்பெறப்பட்டது.

By

Published : Apr 27, 2020, 7:37 PM IST

sc-refuses-to-entertain-plea-for-free-calls-data-usage-facilities-during-covid-19-lockdown
sc-refuses-to-entertain-plea-for-free-calls-data-usage-facilities-during-covid-19-lockdown

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படாமல் தடுக்க அலைபேசி அழைப்புகள், இன்டர்நெட் வசதி, டிடிஹெச் ஆகியவற்றை இலவசமாக்க மத்திய அரசு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர். கவய் ஆகியோரின் முன்னிலையில் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், என்ன வகையான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன? எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தாக்கல் செய்த மனுவை வழக்கறிஞர் மனோகர் பிரதார், திரும்பப்பெறுவதாக நீதிபதிகள் முன் கூறினார். உடனே வழக்கு மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஊரடங்கிலும் டியூஷன்... போலீஸை மாஸ்டர் வீட்டிற்கே அழைத்துச் சென்ற சிறுவன்!

ABOUT THE AUTHOR

...view details