பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்தபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவி வகித்தார். அப்போது அவருக்கு, பாட்னாவில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது.
"சரோஜா சாமான் நிக்காலோ..." - முன்னாள் துணை முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவி பறிபோன தேஜஸ்வி யாதவை அரசு பங்களாவை விட்டு காலி செய்யும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர், காலி செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவரை காலி செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதால், தேஜஸ்வி யாதவல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, தேஜஸ்வி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.