பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள சாட் பௌல் மிட்டால் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவரும் மாணவி நம்மி ஜோஷி. 13 வயதான இவர், மைன்கிராஃப்ட் என்ற காணொலி கேம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு எப்படி எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்து உலகளவில் ஆசியர்களுக்கு கற்பித்துவருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தலைநகர் டெல்லியில் நடந்த இளம் புத்தாக்குநர் எனப் பொருள்படும் 'யங் இன்னோவேட்டர்ஸ்' மாநாட்டில் நம்மி ஜோஷியும் கலந்துகொண்டார். இந்த மாநாட்டிற்கு வந்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைைச் செயல் அலுவலர் சத்திய நாதெள்ளா, இச்சிறுமியின் திறைமைக் கண்டு வியப்படைந்தார்.