அஸ்ஸாம் மாநிலம், காம்ருப் மாவட்டம், கவுகாத்தி பகுதியில் உள்ள ஏரியில் கூட்டத்தை விட்டு தனியாக பிரிந்து வந்த யானை குட்டி ஒன்று தண்ணீர் குடிக்க சென்றுள்ளது.
ஏரியில் சிக்கிய குட்டி யானை பத்திரமாக மீட்பு!
திஸ்பூர்: ஏரியில் சிக்கிய குட்டி யானையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் , வனத்துறையினர் இணைந்து பத்திரமாக மீட்டனர்.
குட்டியானை
அப்போது எதிர்பாராத விதமாக ஆகாய தாமரை நிறைந்த சகதியில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் பல மணி நேரம் போராடி ஏரியில் சிக்கியிருந்த யானை குட்டியை பத்திரமாக மீட்டனர்.
பின்பு அந்த யானை குட்டி தனது கூட்டத்தை விட்டு பிரிந்து வந்துள்ளதால், அதை யானைகள் முகாமில் வைத்து பாதுகாத்து வருவதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : May 11, 2019, 10:47 AM IST