நவீன உலகத்தில் சமூக வலைதளம் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சமூக வலைதளத்தை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குஜராத் முதலமைச்சராக இருந்தபோதிலிருந்தே மோடி சமூக வலைதளத்தை பயன்படுத்திவருகிறார். மோடி பிரதமரான பிறகு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மற்ற அரசியல் கட்சிகளும், சமூக வலைதள பிரிவு என உருவாக்கி இளைஞர்களை கவர முயற்சித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவராக ரோகன் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
Congress
பாஜக அளவுக்கு இல்லை என்றபோதிலும், காங்கிரஸ் கட்சியும் தற்போது சமூக வலைதளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. இதன் தலைவராக பொல்லாதவன் பட நடிகை திவ்யா ஸ்பந்தனா இருந்துவந்தார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களால் அவர் ஒதுங்கியிருந்தார். தற்போது, இவரது இடத்திற்கு ரோகன் குப்தாவை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இதனால். சமூகவலைதளங்களில் பாஜகவுக்கு, காங்கிரஸ் நெருக்கடி தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.