மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருவதால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அதிக மழை பெய்யும் என்பதால், நாசிக்கின் பிம்ப் கிராமத்திலிருந்து வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பிரசித்தி பெற்ற திரிம்பகேஸ்வர் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பாதிவழியில் தத்தளிக்கும் மக்கள்... திரிம்பகேஸ்வரர் நெடுஞ்சாலை மூடல்!
நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஸ்வர் கோயிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ஆற்று நீர் வெள்ளம்போல் ஓடுவதால் சாலை மூடப்பட்டது.
திரிம்பகேஸ்வர்
நாசிக் வழியாக செல்லும் சாலைகளில் அதிகளவில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் பாதி வழியிலேயே நிற்கின்றன. நாசிக் மாவட்டத்தில், அதிகபட்சமாக சுமார் 160 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.