கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அளித்துவிட்டு மும்பை சென்றனர். ஆனால் இன்றுவரை அவர்களின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. இதற்கிடையே, கர்நாடகா அமைச்சரவையில் ஒருவரைத் தவிர அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை சென்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கும் வகையில் தான் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோவாவுக்கு இடமாற்றம்?
மும்பை: கர்நாடகாவைச் சேர்ந்த ஆளும் அரசின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மும்பையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ராஜினாமா செய்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ராஜினாமா செய்த சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்க காங்கிரஸ் கட்சியும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பரிசீலனைக்கு இன்று எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.