தமிழ்நாடு

tamil nadu

புலம்பெயர் தொழிலாளர்களைக் கைவிட்ட பிரதமர் - சுர்ஜிவாலா

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களைக் கைவிட்ட பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கடுமையாகச் சாடியுள்ளார்.

By

Published : May 12, 2020, 11:48 PM IST

Published : May 12, 2020, 11:48 PM IST

Randeep Singh
Randeep Singh

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், "அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, நீங்கள் இன்று கூறியவை நாட்டுக்கும், ஊடகங்களுக்கும் தலைப்புச் செய்தியாகவே போய்ச் சேர்ந்திருக்கிறது.
'மக்களுக்கான மனமார்ந்த உதவிகள்' என்ற ஒற்றை வாசகத்துடன் வெற்று தாள் வெளியாகும் போது ஒட்டுமொத்த நாடும், காங்கிரஸ் கட்சியும் பதிலளிக்கும்.

வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளை நோக்கி பொடி நடையாகவே சென்று கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை நினைத்தால் மனம் வெதும்புகிறது. அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டியவை அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பான பயணமும் தான்.

லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைக் கருணையின்றி கைவிட்ட உங்கள் மீது இந்திய மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது அமலில் உள்ள தேிசிய ஊரடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வரும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 20 லட்சம் கோடியை செலவிடவுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் தான் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவின் கருத்து அமைந்துள்ளது.
இதையும் படிங்க : ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடியில் புதிய திட்டம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details