மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. அந்த வகையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
ஜனநாயகக் கடமையாற்றிய மத்திய அமைச்சர்கள்!
டெல்லி: மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், லக்னோ பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங் அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலை பற்றி என்னால் எதையும் கணிக்க முடியாது எனவும், லக்னோ மக்கள் சரியானவரை தான் தேர்தெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
அதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமப்புற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது குடும்பத்தினருடன் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.