சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில்,பெண்கள் சுய உதவி குழுக்கள் திட்டத்தின் கிழ் பெண்கள் குழுவாக இணைந்து சுற்றுசூழலுக்கு உகந்த வகையிலான விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.
இதற்கென மாட்டு சாணங்களை பயன்படுத்தி விளக்குகளை தயாரிக்கும் பெண்கள், அவை காய்ந்ததும் அழகிய வண்ணங்களைப் பூசி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
பெண்கள் இணைந்து மாட்டு சாணத்தில் உருவாக்கும் வண்ண விளக்கு இங்கு தாயரிக்கப்படும் விளக்குகள் குறைவிலைக்கே விற்கப்படுகிறது. சின்ன விளக்குகள் ரூ.5க்கும், பெரிய விளக்குகள் ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விளக்குகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்கள் உருவாக்கிய வண்ண விளக்குகள் இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 500 முதல் 600 விளக்குகள் தயாரிப்பதாகவும், இதன் மூலம் ஒருவர் மாதம் ரூ.7000 ஆயிரம் வரை வருமானம் பெறுகின்றனர். இதனால் கிராம மக்களின் பொருளாதாரம் மேம்படுவதாகவும் கூறுகின்றனர். இதையும் படிங்க:ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி