தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 5:45 PM IST

ETV Bharat / bharat

பண்டிகை காலத்தில் 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் - ரயில்வே துறை!

ஹைதராபாத்: பண்டிகை காலத்தை முன்னிட்டு 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

rain
rain

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஜூன் 1 முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் வசதிக்காக கூடுதலாக 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது.

முதல்கட்டமாக, 17 சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து தென் மத்திய ரயில்வே ரயில்வே வாரியத்திடம் பரிந்துரைத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பட்டியலில் கவுதமி, நர்சாபூர், நாராயணாத்ரி, சார்மினார், சபாரி, கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

கீழே குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளன :

செகந்திராபாத் - திருவனந்தபுரம்,

செகந்திராபாத் - கவுஹாத்தி,

செகந்திராபாத் - திருப்பதி,

செகந்திராபாத் - காக்கினாடா,

செகந்திராபாத் - நர்சாபூர்,

ஹைதராபாத் - சென்னை,

காச்சிகுடா - மைசூர்,

கடப்பா - விசாகப்பட்டினம்,

பூர்ணா - பாட்னா,

செகந்திராபாத் - ராஜ்கோட்,

விஜயவாடா- ஹூப்ளி,

ஹைதராபாத்- ஜெய்ப்பூர்,

ஹைதராபாத்- ரோக்சுல்,

திருப்பதி - அமராவதி (மகாராஷ்டிரா),

நாக்பூர் - சென்னை,

செகந்திராபாத் - ஹவுரா

புவனேஸ்வர் - பெங்களூர்.

ABOUT THE AUTHOR

...view details