கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது. இந்த விவகாரத்தை முன்னிருத்தி, ராகுல் காந்தி தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "லடாக்கில் சீனாவை எதிர்கொள்ள மத்திய அரசு அஞ்சுவருகிறது.
எல்லை பகுதிகளில் படைகளை நிலைநிறுத்தி சீனா தயாராகிவருவது களத்தில் உள்ள ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது.
தனிப்பட்ட அளவில் துணிச்சல் இல்லாத பிரதமராலும், மெளனம் காக்கும் ஊடகங்களாலும் இந்தியா பெரிய விலை கொடுக்கவுள்ளது" என்றார்.
கல்வான் மோதலுக்கு காரணமான படை வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உறுதி அளிக்குமாறும் சீனா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்த தேசிய இணைய சுகாதார திட்டம் - மோடி