தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் பிரிட்டன் அரசி இடமாற்றம் !

லண்டன் : உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், பிரிட்டன் அரசி எலிசபெத் பங்கிங்ஹாம் மாளிகையில் இருந்து வெளியேறி விண்ட்சர் கோட்டையில் தஞ்சம் புகுந்துள்ளார்.

By

Published : Mar 15, 2020, 5:03 PM IST

queen
queen

சீனாவின் பிறப்பிடமான கோவிட்-19 (கரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தச் சூழலில், லண்டன் பங்கிங்ஹாம் மாளிகையில் இருந்து பிரிட்டன் அரசி எலிசபத், விண்ட்சர் கோட்டையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசியல் வட்டாரங்களில் கேட்டபொழுது, "அரசியல்வாதிகள், விருந்தினர்கள் என உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்து செல்லும் இடமாக பங்கிங்ஹாம் மாளிகை விளங்குகிறது. விரைவில் 94 பிறந்தநாளை கொண்டாடவுள்ள அரசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவருக்கு ஆலோசகர்கள் அறிவுரை வழங்கினர்.

அதன்பேரில், அவர் பக்கிங்ஹாமிலிருந்து வெளியேறி விண்ட்சர் கோட்டையில் தங்கி வருகிறார்" என்றனர்

கோவிட்-19 வைரஸ் காரணமாகப் பிரிட்டனில் ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21 பேர் உயிரிழந்துள்னர்.

இதையும் படிங்க : கொரோனா - பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்க உலக நாடுகளுக்கு ஈரான் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details