சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் கத்தாருக்குள் நுழைய அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.
அதன்படி, சீனா, ஈரான், இத்தாலி, வங்கதேசம், எகிப்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கு விமானங்களை இயக்குவதை கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதேபோல் இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிக்கபட்ட ஆறு நாடுகளுக்கு செல்லும் விமானங்களை குவைத் அரசு தடைசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொரோனாவுக்குப் பயந்து முகமூடி திருட்டு: புனேயில் அதிர்ச்சி