புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆய்ஷி கோஷ் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் இச்சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்றச் செயலாளர் அந்தோணி, சங்க உறுப்பினர்கள் எழிலன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்