தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2020, 4:36 PM IST

ETV Bharat / bharat

'நவீன மீன் அங்காடியை குத்தகைக்கு விடும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்'

புதுச்சேரி : நவீன மீன் அங்காடியை தனி நபருக்கு குத்தகை விடும் முயற்சியை அரசு கைவிட கோரி, விசை படகு உரிமையாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

puduchery Fisherman meeting
puduchery Fisherman meeting

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள குபேரர் அங்காடியில் கூட்டம் நெரிசல் காரணமாக மீன் ஏலம் விடுவதை நேற்று (ஜூன் 13) முதல் அரசு தடைவிதித்தது. அதற்கு பதிலாக புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நவீன மீன் அங்காடி பகுதியில் மீன் ஏலம் விடுவதற்கு அனுமதி அளித்தது.

இதற்கிடையே, மீன் அங்காடியை தனி நபருக்கு குத்தகை விடப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 18 மீனவ கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நவீன மீன் அங்காடி தனிநபருக்கு குத்தகை விடப்பட்டதாகவும், அவ்வாறு நடைபெற்றால் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நவீன மீன் அங்காடியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details