புதுச்சேரியில் ஊரடங்கின் போது மளிகை கடை விற்பனையாளர்கள், வியாபார நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி ரங்கப் பிள்ளை வீதி, பாரதி வீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நடைபெறும் கடைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளைக் கூட்டுறவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடைகாரரிடம் அதிக விலைக்கு பொருள்கள் விற்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தினார்.