தமிழ்நாடு

tamil nadu

பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு!

By

Published : Jun 4, 2020, 4:16 PM IST

புதுச்சேரி: ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய மூன்று மில்களை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முதலமைச்சர், சமூகநலத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அனைத்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அமைச்சரை சந்தித்து மனு வழங்கிய தொழிலாளர்கள்
அமைச்சரை சந்தித்து மனு வழங்கிய தொழிலாளர்கள்

புதுச்சேரியில் 122 ஆண்டுகளாக இயங்கிவந்த பழமையான ஏஎப்டி பஞ்சாலை நூல் மில் ஏப்ரல் 30ஆம் தேதி மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே மில்லை மூடாமல் தொடர்ந்து இயக்க மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என அனைத்து சங்கங்கள் சார்பில் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். ஊரடங்கின் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கி போனதால் இதுதொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது புதுச்சேரியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, புதுச்சேரி அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

அமைச்சரை சந்தித்து மனு வழங்கிய தொழிலாளர்கள்

அதில், “புதுச்சேரியில் உள்ள ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய மூன்று மில்களை அரசு மூடக்கூடாது தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கும் நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள ஒட்டுமொத்த ஊதியத்தில் பாதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீதியை இவ்வாண்டு இறுதிக்குள் இரண்டு தவணைகளாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன..

ABOUT THE AUTHOR

...view details