தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவையில் சத்துமாவுடன் கூடிய பால் வழங்கும் திட்டம்!

புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட தொடக்கப் பள்ளிகளில் சத்துமாவுடன் கூடிய பால் வழங்கும் திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

புதுவையில் சத்துமாவுடன் கூடிய பால் வழங்கும் திட்டம்!
புதுவையில் சத்துமாவுடன் கூடிய பால் வழங்கும் திட்டம்!

By

Published : Nov 29, 2019, 7:25 AM IST

புதுச்சேரி மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில், 'ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி' திட்டத்தின் கீழ் 100 மில்லி லிட்டர் பால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக பாலுடன் சத்துமாவு கலந்து அளிக்கும் திட்டத்தினை, புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் மாவட்டம், பெரிய பேட் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

ஒரு மாணவருக்கு ஏழு கிராம் என்ற அளவுடன் சத்துமாவினை சாக்லேட் மற்றும் பாதாம் சுவையுடன் வார நாட்களில் திங்கள், புதன், மற்றும் வெள்ளி கிழமைகளில் மூன்று நாட்கள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 60 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

இதையும் படிங்க...சென்னை பிரபல ரவுடி செஞ்சியில் கைது

ABOUT THE AUTHOR

...view details