தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காய்கறிகளை சாலையில் கொட்டி உழவர் சந்தை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: நிலுவையிலுள்ள 13 மாத ஊதியத்தை வழங்கக்கோரி உழவர் சந்தைகளை மூடியும் சாலைகளில் காய்கறிகளைக் கொட்டியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Puducherry Farmers Market Employees Demonstrated
Puducherry Farmers Market Employees Demonstrated

By

Published : Feb 3, 2020, 11:49 AM IST

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், லாஸ்பேட்டை, வில்லியனூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கிவருகின்றன. இதில் அரசு சார்பிலான காய்கறிக் கடைகளும் உள்ளன. காய்கறிகள் விற்பனை செய்வதற்கு ஊழியர்களும் பணியாற்றிவருகின்றனர்.

உழவர் சந்தை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அந்த ஊழியர்களுக்கு கடந்த 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அதனைக் கண்டித்து ஊழியர்கள் காய்கறிகளை அங்குள்ள சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இவர்களுடன் உழவர் சந்தை விவசாயிகளும் ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே ரேக்ளா பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details