தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2020, 5:19 PM IST

ETV Bharat / bharat

சீன ராணுவம் ஊடுருவல்?... மத்திய அரசிடம் விளக்கம் கோரும்  நாராயணசாமி

புதுச்சேரி: சீன ராணுவம், இந்திய எல்லையில் ஊடுருவியுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்கவேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

puducherry cm urge to center to explain Chinese military infiltration
puducherry cm urge to center to explain Chinese military infiltration

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள காணொலியில், "புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் முழ ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கரோனா நோய்த் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு, மூன்று மாதங்கள் கூடுதலாக இலவச அரிசி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உடனே குறைக்கவேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான செவிலியர், ஆஷா பணியாளர்களை உடனடியாக நியமிக்க மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன் .இவர்களுக்கான ஊதியம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும்.

சீன ராணுவம், இந்திய எல்லையில் ஊடுருவியுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details