தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவைக் கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிப்பானுடன் களமிறங்கிய முதலமைச்சர் நாராயணசாமி, முகக்கவசம் அணிந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

puducherry-cm-narayanasamy-stepup-in-cleaning-in-his-own-constituency
puducherry-cm-narayanasamy-stepup-in-cleaning-in-his-own-constituency

By

Published : Mar 29, 2020, 1:05 PM IST

கரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனாவைத் தடுக்க மாநில அரசுகள் சார்பாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

முக்கியமாக புதுச்சேரியில் மத்திய அரசுக்கு முன்னதாகவே ஊரடங்கு உத்தரவை அறிவித்து, அரசு சார்பாகத் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு பார்வையிட்டுவரும் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று அவரது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு பகுதியில் ஆய்வுமேற்கொண்டார். அப்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்துவந்தன. அப்போது கிருமிநாசினி தெளிப்பானை வாங்கி முதலமைச்சர் நாராயணசாமியே, வீதிகளில் முகக்கவசம் அணிந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

களத்தில் இறங்கிய புதுச்சேரி முதலமைச்சர்

தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என நாராயணசாமி அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காய்கறிகள் சந்தையில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: இந்தியாவிற்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details