நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கரோனா வைரஸின் பரவல் குறைந்தளவில் உள்ளதால் அம்மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் அதிகளவில் பொது இடங்களில் குவிந்துவருவதால், வைரஸ் தொற்று பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைகளை திறக்க கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.