புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் 1999ஆம் ஆண்டு ராணுவப் பணியில் சேர்ந்துள்ளார். அப்போதிலிருந்து கார்கில் போர், ஜம்மு காஷ்மீர் - பங்களாதேஷ் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் சசிகுமார்பணியாற்றியுள்ளார்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் - மேளதாளங்களுடன் அமோக வரவேற்பு கொடுத்த மக்கள்!
புதுச்சேரி: ராணுவத்தில் 21 ஆண்டு காலம் பணி முடித்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய வீரருக்கு, பொதுமக்கள் மேளதாளங்களுடன் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
ராணுவத்திலிருந்து திரும்பிய வீரர்
இந்நிலையில், 21 ஆண்டு காலம் ராணுவப் பணி முடிந்துவிட்டு சொந்த ஊரான புதுச்சேரிக்கு இன்று (ஆகஸ்ட் 4) திரும்பினார். சசிகுமாருக்குபுதுச்சேரி எல்லைப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மேளதாளங்களுடன், வழிநெடுகிலும் மலர் தூவி, மாலை, சால்வை அணிவித்து அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்பட்டாரா?
TAGGED:
புதுச்சேரி ராணுவ வீரர்