கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் புதுவைக் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லாஸ்பேட்டை விமானநிலையம் அருகே நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் சென்றனர். அப்போது அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு அவர்கள் முகக்கவசங்களை வழங்கினர்.
நரிக்குறவர் இன மக்களிடம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை
புதுச்சேரி: ஊரடங்கை மீறி யாராவது சாராயம் விற்றால் தகவல் தெரிவிக்குமாறு நரிக்குறவர் இன மக்களிடம் காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
police
அங்கிருந்தவர்களிடம் கரோனா தற்காப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஊரடங்கு நேரத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்பவர்களை காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், நரிக்குறவர் இன மக்களிடம் லாஸ்பேட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை பயன்படுத்தி திருட்டு!