தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது' - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: கரோனா பரிசோதனை எடுத்த பிறகு தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

By

Published : Sep 8, 2020, 7:08 PM IST

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரியில் நேற்று (செப்டம்பர் 7) எடுக்கப்பட்ட 2,081 கரோனா பரிசோதனையில் 440 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து குணமடைந்து 446 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இன்று 12 பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் 25 இடங்களில் அரசு சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதை அதிகப்படுத்தி அதிக இடங்களில் எடுக்க அரசு முயற்சித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக புதியதாக செவிலியர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. புதிதாக எடுக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து பழைய ஊழியருடன் இணைத்து 25 இடங்களில் பரிசோதனை எடுப்பதற்கு பணி அமர்த்தப்பட உள்ளனர்.

சுகாதார துறையில் உள்ள பழுதான வாகனங்களை சரி செய்து புதிய வாகனங்களையும் சேர்த்து முழுவீச்சில் புதுச்சேரியில் கரோனா பரிசோதனைகள் தொடங்கப்படும். இதுவரை 86 ஆயிரம் பேருக்கு வீடு தேடி கரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பரிசோதனை எடுத்த பிறகு வெளியில் சுற்றுவதைத் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details