கேரள மாநிலத்தில், வசிக்கும் தமிழர்களுக்காக, மொழி சிறுபான்மை பிரிவில், பள்ளிகளில் தமிழ் தேர்வு நடக்கிறது. இதில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் வினாத்தாள்களில், பல்வேறு குளறுபடிகள் இருந்தன. திருவனந்தபுரத்தில் செயல்படும் தேர்வாணையத்தில், தமிழ் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.
10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் குளறுபடி - மாணவர்கள் கவலை
பாலக்காடு: கேரள மாநிலத்தில் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் வினாத்தாளில் இருந்த குளறுபடியால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு
ஆனால், இங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால், வினாத்தாளில் ஒரே கேள்வி, இரண்டு முறை கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல குளறுபடிகள் வினாத்தாளில் இருந்தன. இதனால், மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, 'கேரள அரசு தேர்வாணையத்தின் அலட்சியப் போக்கை ஆய்வு செய்து, நியாயமான முறையில் கேள்வித்தாள் தயாரித்து, தேர்வு நடத்த வேண்டும்' என, கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.