தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகஸ்ட் 8ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரணாப் முகர்ஜி

By

Published : Jul 29, 2019, 4:00 PM IST

இந்தியாவின் 13ஆவது குடியரசு தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பினை கடந்த ஜனவரியில் குடியரசு மாளிகை வெளியிட்டது, மேலும் இந்த விருதினை சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், அசாமி பாடகர் பூபன் ஹசாரிகா மரணத்திற்குப் பின் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவராக இருப்பினும் தனது பணிக்காலத்தில், நாட்டு மக்களுக்கு பல முக்கிய சேவைகளை பிரணாப் செய்துள்ளார். அதனை பாராட்டும் வகையில், குடியரசு மாளிகை அவருக்கு பாரத ரத்னா விருதினை அளிக்கவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

இதனையொட்டி, பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துவந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, பிரணாப் முகர்ஜி நம் நாட்டினை வலுவான பாதைக்கு இட்டுச்செல்ல பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படவுள்ளதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அவரின் மகத்தான பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜி, சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், அசாமி பாடகர் பூபன் ஹசாரிகாவிற்கு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details