புதுச்சேரி: ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தொட்டி: முதலமைச்சர் திறந்து வைப்பு!
ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அடுத்துள்ள, மேல பொன்பற்றி கிராமத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. நெடுங்காடு, மேல பொன்பேற்றி, சித்தன் தெரு, சேவகன் தெரு, கீழபொன்பற்றி, ராஜா தெரு, வடக்கு தெரு, உட்கடை, மேட்டுத்தெரு, புத்தகரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,500 பேர் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக் கண்ணன், கந்தசாமி, சட்டபேரவை உறுப்பினர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த் தேக்கத் தொட்டி, ஒரு நீர் நீரேற்று நிலையம், 20 குதிரை திறன் கொண்ட இரண்டு நீரேற்றும் இயந்திரங்கள், ஒரு ஜெனரேட்டர் உடன் இந்த குடிநீர் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.